புதுப்பேட்டை 2 அதிரடி அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன் - கொண்டாட்டத்தில் கொக்கிகுமார் ஃபேன்ஸ்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (12:33 IST)
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கேங்ஸ்டர் படமாக பலரையும் கொலை நடுங்கவைத்த திரைப்படம் புதுப்பேட்டை.  2006-ம் ஆண்டு செல்வராகவன்  - தனுஷ் கூட்டணியில் வெளியான இத்திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மிரட்டியெடுத்தது. கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷின் நடிப்பு இன்று வரை பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என முதல் பாகம் படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோதே கேட்க துவங்கிய ரசிகர்கள் இன்று வரை அதே எதிர்பார்ப்பில் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் புதுப்பேட்டை 2 படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு சில நாட்களாக அதுகுறித்த நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.

அந்தவகையில் சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் கல்லூரி விழா ஒன்றில் பங்கேற்று தனது அடுத்த படம் தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2 இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தனுஷ் ரசிகர்களால் தீயாய் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்