வெளிநாட்டில் படமாகும் ‘செக்கச் சிவந்த வானம்’

Webdunia
புதன், 9 மே 2018 (17:04 IST)
மணிரத்னம் இயக்கிவரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் ஷூட்டிங், வெளிநாட்டில் நடைபெறுகிறது.

 
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில், அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
 
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் ஷூட்டிங், தற்போது அபுதாபியில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் துபாய் சென்றுள்ளனர். இந்தப் படத்தில் அரவிந்த் சாமியின் போர்ஷன் ஏற்கெனவே நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்