சீதக்காதி நவம்பர் 16-ல் ரிலீஸ் இல்லை –பின்னணி என்ன?

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (09:01 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் செக்கச் சிவந்த வானம் மற்றும் 96 படங்களை அடுத்து அவர் நடிப்பில் உருவான சிதக்காதி படம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு 2018ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், ஜூங்கா ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் அதன் பின் வெளியான 96, செக்கச்சிவந்த வானம ஆகிய படங்கள் வசூல் மழை பொழிந்துள்ளன.

இதையடுத்து அவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலஜி தரணிதரன் இயக்கத்தில் நடித்துள்ள சீதக்காதி படம் நவம்பர் 16-ந்தேதி வெளியாக இருந்தது. ஆனால் திடீரென அந்த படம் தற்போது பின் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது  எல்லா வேலைகளும் முடிந்துள்ள நிலையில் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்னவென்றால் விஜய் சேதுபதி நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் மற்றும் 96 படங்கள் இன்னமும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் இந்தப் படம் வெளியானால் அந்தப் படங்கள் பாதிக்கப்படலாம் என்று விஜய் சேதுபதி நினைக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து விஜய் சேதுபதி படங்கள் ரிலீஸாவதால் ரசிகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடுமோ எனவும் அவர் அச்சப்படுகிறாராம்.


எனவே ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாரம். அதுமட்டுமல்லாமல் தீபாவளிக்கு சர்காரும் நவம்பர் 29-ந்தேதி 2.0 வும் ரிலீசாக இருப்பதால், இடைப்பட்ட நவம்பர் 16-ந்தேதி வெளியாக இருக்கும் சில சின்னப்பட தயாரிப்பாளர்கள் வேண்டுகோளுக்கினங்கியும் சீதக்காதி ரிலீஸ் தள்ளிப்போடப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்