தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. பலர் நேரில் சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இப்போது வடிவேலு ஏன் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை என்பது குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் விவேக் இறந்தப்போ போகலன்னு நெறயப் பேர் பேசினாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போய் அவன் மனைவி, குழந்தைங்க கிட்ட எல்லாம் விசாரிச்சேன். அந்த நேரத்துல நானும் ரொம்ப மோசமாதான் இருந்தேன். எங்க வீட்டுலயே எல்லாரும் பயத்துலதான் இருந்தாங்க. அதனாலதான் நான் போகல” எனக் கூறியுள்ளார்.