25 ஆவது திருமண நாளைக் கொண்டாடி மகிழ்ந்த் அஜித்& ஷாலினி…க்யூட் வீடியோ!

vinoth

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (10:46 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு எளிமையாகக் கேக் வெட்டி இருவரும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த வீடியோவை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர்.

What a lovely video ????#AK and Mrs. #ShaliniAjithkumar
Celebrating their 25th wedding anniversary ❤️ ???? pic.twitter.com/xIuNlFfzji

— Ramesh Bala (@rameshlaus) April 25, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்