இயக்குனர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் அறிமுகம் தேவையில்லாதவர். அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்கி கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த படத்தில் பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பெரியளவில் பார்வையாளர்களைக் கவரவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் தனது கட்சியில் திருநர்கள் என்ற அணியை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். அந்த அணியை 9 ஆவது இடத்தில் பட்டியலிட்டு இருப்பது குறித்து சில திருநர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இது சம்மந்தமாக கருத்து தெரிவித்த சீனு ராமசாமி “இன்று நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிக்கையில் 9வது இடம் தங்களுக்கு தரப்பட்டிருப்பதை விமர்சிக்கும் திருநர்கள் எனது இயக்கத்தில் உருவான கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற திருநங்கைகள் முன்னேற்றப் பாடலை ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை எங்கும் எவரும், ஒரு வாழ்த்து இல்லை என்பது இன்றுவரை என்ற கேள்வி என்னிடமுண்டு" என அங்கும் வந்து தன் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் அவர் மேல் விமர்சனம் எழ வழிவகுத்துள்ளது.