தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் படத்தை திட்டமிட்ட படி இயக்கும் முடிக்கும் இயக்குனர்களில் சுசீந்தரனும் ஒருவர். கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்விப் படங்களாக அமைந்ததால் அவருக்கு இப்போது இறங்குமுகமாக உள்ளது. இப்போது அவர் வள்ளிமயில் மற்றும் 2கே லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.