விஜய்யை நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை: செல்வபெருந்தகை விளக்கம்..!

Siva

புதன், 12 பிப்ரவரி 2025 (07:53 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை இந்தியா கூட்டணிக்கு செல்வபெருந்தகை அழைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், விஜய்யை தான் தனிப்பட்ட முறையில் கூட்டணிக்கு அழைக்கப்படவில்லை என்று தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய்யை இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அழைத்தீர்களே, அதற்கு என்ன காரணம் என்று செல்வபெருந்தகை அவர்களிடம் கேள்வி கேட்டபோது, "அம்பேத்கர், பெரியார், வேலுநாச்சியார், காமராஜர் ஆகியோர்களை தனது கொள்கை தலைவர்களாக விஜய் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் கொள்கையும் அதுவே என்பதால் தான் அவரை கூட்டணிக்கு அழைத்தேன். மற்றபடி, விஜய்யை நான் தனிப்பட்ட முறையில் கூட்டணிக்கு அழைக்கவில்லை," என்று தெரிவித்தார்.

மேலும், "விஜய்யின் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு தான் லாபம். ஆளுங்கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தியால் மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பார்கள். அந்த வகையில், அந்த வாக்குகள் அதிமுகவுக்கு செல்லாமல் விஜய்க்கு பிரிந்து செல்லும். இது இந்தியா கூட்டணிக்கு நல்லதே," என்றும் அவர் கூறினார்.

அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்