சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (19:21 IST)
சிவகார்த்திகேயன், சமந்தா நடித்து முடித்துள்ள 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
டி.இமானின் இசையில் யுகபாரதியின் வரிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மதுரையில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னர் இம்மாதம் 25ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிவகார்த்திகேயனின் ஓப்பனிங் பாடலான வாரேன் வாரேன் சீமராஜா என்ற பாடல் வெளியாகவுள்ளது. 
 
வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மற்றும் 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்