சமூக வலைதளங்களில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம்

வெள்ளி, 20 ஜூலை 2018 (12:13 IST)
சீமராஜா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த படத்தில் பிஸியாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் வரும் விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 13ஆம் தேதி  'சீமராஜா' ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,  ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்  பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானி ரோலின் கெட்டப்பாக இருக்க வாய்ப்புள்ளது என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்