தோகை மட்டும் தான் மிஸ்ஸிங்... மயில் ஆடுறமாதிரியே இருக்கு - சயீஷாவின் கியூட் நடனம்!

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (14:55 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின்     பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர். மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சல்பேட்டா" என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பிரபலங்களுக்குள் காதல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆம், சயீஷா தனது இன்ஸ்டாவில் ஆர்யாவுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படமொன்றை வெளியிட்டு வருகிறார். தற்போது சயீஷா தனது ட்விட்டரில் செம கியூட்டாக நடனமாடும் வீ டியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கண்ட அவரது ரசிகர்கள் உடல் எடை கூடிவிட்டதாக கமெண்ட்ஸ் செய்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்