கவர்ச்சி களத்தில் குதிக்க தயார்: சாயிஷா சைகல்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (12:59 IST)
வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயிஷா சைகல் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


 

 
வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். வனமகன் படம் திரைக்கு வரும் முன்பே இவருக்கு அடுத்தடுத்து படம் வாய்ப்புகள் குவிந்தது. முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அறிமுக நாயகிகள் ஜெயரம் ரவியுடன் நடிப்பது ஒரு வரம் என்று ரவியை புகழ்ந்து தள்ளினார்.
 
தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். வனமகன் படத்தில் சாயிஷா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறியவர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்