ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்ததை, ஆரவ் பரணிக்கு கொடுக்காதது ஏன்? கமலை திணர வைத்த சதீஷின் கேள்வி!!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (12:47 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஓவியா வெளியேறியதும், மக்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க விரும்பவில்லை என தெரிவித்துவந்தனர். 


 
 
ஆனால், அதையும் மீறி இன்னும் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கான முக்கிய காரணம் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான்.
 
நேற்றைய பிக்பாஸ் வார இறுதி என்பதால் கமல் நிகழ்ச்சியில் தோன்றினார். அவருடன் ஸ்ரீ பிரியா மற்றும் சதீஷ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
 
சதீஷ் மற்றும் ஸ்ரீ பிரியா கமலிடம் பிக்பாஸ் குறித்து சரமாரியாக பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுக்கொண்டனர். ஆனால், சதீஷின் ஒரு கேள்விக்கு கமல் பதிலளிக்க முடியாமல் யோசித்த நிகழ்வும் நேற்று அரங்கேறியது.
 
சதீஷ் சினேகனின் கட்டிபிடி வைத்தியம் பற்றியும் ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றியும் கேள்வி எழுப்பினர். வீட்டில் அனைவராலும் ஓவியா ஒதுக்கப்பட்டார், எனவே அவரை மன அளவில் தேற்ற மருத்துவ முத்தம் கொடுத்தாத ஆரவ் கூறினார்.  
 
அப்படி இருக்க பரணியை வீட்டில் இருந்த அனைவரும் ஒதுக்கிய போது ஆரவ் பரணிக்கு ஏன் மருத்துவ முத்தம் கொடுக்கவில்லை என கேட்டார் சதீஷ். இந்த கேள்விக்கு பதிலளிக்க கமல் சற்று யோசிக்கவே செய்தார்.
அடுத்த கட்டுரையில்