குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (12:13 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. இந்த படம் கவனிக்கத்தக்க ஒரு படமாக அமைந்தது.

அடுத்தடுத்த ஹிட்களால் கவனிக்கத்தக்க தயாரிப்பு நிறுவனமாக அறியப்பட்டுள்ள மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ அடுத்தடுத்து ஐந்து படங்களை தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படங்களில் ஒன்றில் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இன்னொரு படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்