நாளை முதல் சர்பட்டா பரம்பரை ட்ரெய்லர்! – பா.ரஞ்சித் ட்வீட்!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (13:44 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன, அந்த வகையில் சார்பட்டா பரம்பரையும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 22 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் நாளை 12 மணிக்கு வெளியாக உள்ளதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்