சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கு வந்த சிக்கல்… பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்!

vinoth
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (10:01 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்துக்கு ஜி நிறுவனம் பைனான்ஸ் செய்ய பா ரஞ்சித்தோடு இணைந்து ஒரு இந்தி பட தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த படத்துக்கு 90 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சார்பட்டா பரம்பரை படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்துக்கு இவ்வளவு மிகப்பெரிய பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் எதிர்பார்த்தபடி இந்த படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்