3 மாதம் தள்ளிவைக்கப்பட்ட மகேஷ் பாபு திரைப்படம்!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:34 IST)
மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி  சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸ் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்டது.

மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்காரு வாரிபட்டா என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த படத்தின் டீசர் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

படத்தின் ரிலிஸ் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன. ஆனால் ஜனவரி மாதம் தெலுங்கில் பல பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் ரிலீஸாக உள்ளதால் சர்காரு வாரிபட்டா படத்தின் ரிலீஸை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்