போடா வாடா மட்டுமில்லை...சரவணன் இன்னும் என்னவெல்லாம் பேசியிருக்காருன்னு பாருங்க!

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:09 IST)
பிக்பாஸ் வீட்டில் எப்போது யாருக்கு சண்டை வரும் என்றே தெரியாது. நல்ல நண்பர்களாக பேசிக்கொண்டிருப்பவர்களும் திடீரென சண்டையிட்டு புரளுவார்கள். அப்படித்தான் கடந்த இரண்டு வாரங்களாக கவின், சாக்ஷி, லொஸ்லியா போன்ற மூவரின் பிரச்சனை தலைவிரித்தாட பின்னர் நேற்று தான் ஓரளவிற்கு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. 


 
அந்த பிரச்சனை முடிந்து ஓய்வதற்குள்  அடுத்த பிரச்சனை ஆரம்பித்து விட்டது. ஆம், தற்போது சேரனுக்கும் சரவணனுக்கு  ஆரமித்துள்ள பிரச்னை அடிதடியில் போய் முடியாதது மட்டும் தான் குறை. தன்னை குறை சொன்ன சேரனை சரவணன் வாயா போய என்று முதலில் பேச பின்னர் வா டா போடா என்று பேச ஆரம்பித்துவிட்டார்.  இது மட்டுமல்ல இதன் பின்னர் மீண்டும் பேசிய சரவணன், வெளியே வந்தா தூக்கி போட்டு மிதிப்பேன் என்றெல்லாம் கூறியுள்ளாராம். 
 
மேலும் தொழில் ரீதியாவும் சேரனை ஏளனமாக பேசியுள்ளார் சரவணன். அதாவது,  "நான் ஹீரோவா நடிக்கும் போது நீ அசிஸ்டன்ட் டைரெக்ட்டரா வேலை செஞ்சா பா*  என்றெல்லாம் மிகவும் மோசமாக பேசியுள்ளாராம் . இதனை கேட்டவுடன் சேரன் மனமுடைந்துவிட்டாராம். பின்னர் சேரனை மது மற்றும் தர்ஷன் தான் ஆறுதல் செய்தார்களாம். இதையெல்லாம் இன்று ஒளிபரப்பப்படுமா அல்லது எடிட்டில் நீக்கிவிட்டு ஒளிபரப்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்