தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன், கடந்த 2009-ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்த தம்பதிகள், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். தற்போது, அந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
சமீபத்தில், பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துகொண்டார். அதே இடத்தில் பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடன் ஒரே நிற உடையில் வந்து, மணமக்களை வாழ்த்திய நிகழ்வு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர், ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, இதற்கு அதிர்ச்சியோடும் வேதனையோடும் கூடிய அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலாக, ரவி மோகன் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு, பாடகி கெனிஷாவை தனது வாழ்க்கையின் சிறந்த தோழியாக அறிமுகம் செய்துள்ளார். “என் மகன்களை நான் பிரியவில்லை, மனைவியை மட்டும் பிரிகிறேன்” என்றார்.