லாஸ்லியாவின் 'ஜானு' கெட்டப்பிற்கு த்ரிஷாவின் ரியாக்சன்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (10:46 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் திரிஷா நடித்த 96 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. குறிப்பாக திரிஷாவின் ஜானு கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பல ரசிகர்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு ஜானு என்று பெயர் வைத்ததாக செய்திகள் வெளியாகியது. அந்த அளவிற்கு ஜானு கேரக்டர் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்தது என்று கூறலாம் 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் பிரபல நட்சத்திரங்களின் கேரக்டர்களுடன் கூடிய ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் போட்டியாளர்களின் ஒருவரான லாஸ்லியாவுக்கு திரிஷாவின் ஜானு கேரக்டர் கொடுக்கப்பட்டு, 'திருப்பாச்சி' படத்தில் இடம்பெற்ற 'கட்டு கட்டு' என்ற பாடலுக்கு நடனமாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது
 
இந்த டாஸ்க்கை லாஸ்லியா சரியாகவே செய்த போதிலும் திரிஷாவின் ரசிகர்கள் ஜானு கேரக்டர் லாஸ்லியாவுக்கு சரியாக பொருந்தவில்லை என்றும், 'ஜானு' என்றால் த்ரிஷா மட்டும்தான் என்றும் கமெண்ட் அடிக்கிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட திரிஷா, 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜானு கேரக்டரில் லாஸ்லியாவின் தோற்றம் நன்றாக இருந்தது. அவர் 'கட்டு கட்டு' பாடலுக்கும் நன்றாக டான்ஸ் ஆடியதை புரமோ வீடியோவில் பார்த்தேன். விரைவில் இந்த எபிசோடை பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார் திரிஷாவின் இந்த பதிவிற்கு பாசிட்டிவ் கமெண்டுக்கள் வந்து கொண்டிருந்தாலும் ஜானு கேரக்டரில் த்ரிஷாவை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை என்றே பல ரசிகர்களின் எண்ணமாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்