நோய் தொற்றை கட்டுப்படுத்த ஆட்சியாளர்களின் கடுமையான முயற்சி, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், பத்திரிகை, ஊடக சகோதரர்களின் ஒய்வில்லா உழைப்பு, இதற்கெல்லாம் பலன் கிடைக்குமா ?
தொற்றை கட்டுப்படுத்த முடியுமா?
தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம், நம்மை நாம் பாதுகாத்து கொள்வது மட்டும் தான்..பொருளாதார பின்னடைவுகள், உழைத்தால் தான் உணவு என்று வாடுகின்ற மக்கள் ஒருபுறம் இருந்தாலும் நம்மை இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாத்து கொள்வது முதல் கடமை.
உடல் ஆரோக்கியமும், உயிருமே நாம் தற்போது பாதுகாக்க வேண்டியது என்பதை மனதில் கொண்டு இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையுடன், தேவைப்பட்டால் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு நிச்சயமாக உங்கள் துன்பங்களை அறிவார்கள்,
நல்லது நடக்கும் இறைவா, போதும் உன் சீற்றம் எங்களை வாழ விடு
இவ்வாறு நடிகர் சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.