இந்தியாவுக்கு உதவியாக ரூ.110 கோடியை வழங்கும் டுவிட்டர் !

செவ்வாய், 11 மே 2021 (10:24 IST)
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கும் நிலையில் இந்தியாவுக்கு  உதவியாக ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர் நிறுவனம். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,29,92,517 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 3,876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,49,992 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 37,15,221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 17,27,10,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா உதவியாக இந்தியாவுக்கு ரூ.110 கோடியை வழங்குகிறது டுவிட்டர் நிறுவனம். இது குறித்த அறிவிப்பை டிவிட்டர் நிறுவன சி.இ.ஓ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொகை இந்தியாவின் மூன்று தொண்டு நிறூவனங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்