துபாய் கோல்டன் விசாவை பெற்ற அடுத்த தமிழ் சினிமா பிரபலம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (16:56 IST)
நடிகர் சரத்குமாருக்கு துபாய் அரசின் கௌரவ கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதையடுத்து இப்போது இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களுக்கு கோல்டன் விசா எனும் சிறப்பு விசாவை வழங்கி வருகிறது. இந்த விசாவைப் பெறுபவர்கள் 10 ஆண்டுகள் எப்போது வேண்டுமானாலும் துபாய்க்கு சென்றுவரலாம். வேறு எந்த விசாவும் எடுக்க தேவையில்லை.

இந்த விசா இப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த சினிமாக் கலைஞர்கள் பலருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மோகன்லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், த்ரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், பாடகி சித்ரா மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அந்த பட்டியலில் இப்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்களை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்