அஜித்தை வெள்ளைக்காரர் எனப் புகழ்ந்த நடிகை !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:15 IST)
தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகைகளில் ஒருவரான சரண்யா பொன்வண்ணன் நடிகர் அஜித்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

நாயகன் படம்  மூலம் நாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை சரண்யா கதாநாயகியாக பெரிய அளவில் வரவில்லை என்றாலும் குணச்சித்திர நடிப்பின் மூலம் முத்திரைப் பதித்துள்ளார். அஜித், விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணிக் கதாநாயகர்கள் முதல் இளம் கதாநாயகர்கள் வரை எல்லோருக்கும் அம்மாவாக நடித்துள்ள அவர் தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி பேசியுள்ளார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சரண்யா கிரீடம் படத்தில் அஜித்துடன் நடித்ததைப் பற்றி ‘அஜித்தைப் பற்றி அவர் ஒரு அழகு சுந்தரன்… அவர் செம கெத்தாக, மாஸாக இருப்பார்…. ஸ்பாட்டில் அவர் வைத்ததுதான் சட்டமாக இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர்மாறாக அஜித் ஒரு குழந்தை மாதிரி எனப் புரிந்து கொண்டேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு வெள்ளைக்காரர் என்றுதான் சொல்லவேண்டும்… அந்த அளவிற்கு அழகானவர் அவர்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்