த்ரிஷாவின் அடுத்த படத்தில் சந்தோஷ் பிரதாப்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:21 IST)
த்ரிஷாவின் அடுத்த படத்தில் சந்தோஷ் பிரதாப்
த்ரிஷாவின் அடுத்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் உள்பட ஒரு சில திரைப் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும் நிலையில் ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார் 
 
இந்த படத்தை அருண் வசீகரன் இயக்க உள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதையில் த்ரிஷா, சந்தோஷ் பிரதாப் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்