ஓடிடியில் வெளியாகும் த்ரிஷாவின் அடுத்த படம்

புதன், 19 ஜனவரி 2022 (20:07 IST)
பிரபல நடிகை த்ரிஷா நடித்த மலையாள படம் ஒன்று மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
கடந்த 2018 ஆம் ஆண்டு த்ரிஷா நடித்த மலையாள திரைப்படம் ஹேய் ஜுட் இந்த படத்தின் நாயகன் நிவின் பாலி என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் மலையாளத்தில் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆஹா என்ற ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜனவரி 21-ஆம் தேதி ஆஹா ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மேலும் சில த்ரிஷாவின் படங்கள் டப் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்