சந்தானம் நடித்த சபாபதி படத்தின் சென்சார் சான்றிதழ்: நவம்பரில் ரிலீஸ்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (21:51 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று சபாபதி என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தை நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
இந்த படத்தை ஸ்ரீனிவாச ராவ் என்பவர் இயக்கியுள்ளார் என்பது, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்