பிக் பாஸ் கவின் நடித்த லிப்ட் படம் ரிலீசுக்கு தயாராகி 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் திரையரங்குகளில் திறந்தவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஓடிடியில் வெளியானது. ஆனாலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து சிறப்புக் காட்சிகளை காட்டி படம் நன்றாக இருக்கிறது என அவர்களை சொல்லவைத்து ஒப்பேற்றி வருகின்றனர்.