சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆண்டி இந்தியன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் ரிவைசிங் கமிட்டியில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் 38 இடங்களில் கட் சொல்லியும், படத்தின் பெயரான ஆண்ட்டி இண்டியன் என்பதை மாற்ற வேண்டும் என சொல்லியும் அப்படி செய்தால் மட்டுமே சான்றிதழ் தரமுடியும் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போது வெற்றியும் பெற்றுள்ளனர்.
படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாறன். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சம்மந்தமாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாறன் கலந்துகொண்டு பேசிய போது ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டார். அதில் முதலில் படத்துக்கு கேனப் பய ஊர்ல கிறுக்குப் பய நாட்டாம என்றுதான் பெயர் வைத்திருந்தோம். ஆனால் அந்த பெயரோடு வந்தால் கண்டிப்பாக சிக்கல் வரும் என்றுதான் இந்த தலைப்பை வைத்தோம். யார் எக்கேடு கெட்டுப் போனாலும் என்ன என்று வாழ்பவர்களை குறிக்கதான் ஆண்டி இந்தியன் என்ற தலைப்பை வைத்தேன் எனக் கூறியுள்ளார்.