தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் இவர் இசையமைத்த வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை, வீரம் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி படங்களுக்கு இசையமைத்து வந்தார்.
கடைசியாக அவர் தமிழில் சூர்யாவின் கங்குவா படத்துக்கு இசையமைத்திருந்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சிலராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். வேணு இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகவுள்ள எல்லம்மா திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் நடிகர்களாக ஆவது தொடர்ந்து வரும் நிலையில் அந்த வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே விஷாலின் வெடி உள்ளிட்ட சில படங்களில் தோன்றியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.