இந்நிலையில் இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸான சங்கராந்திக்கு வஸ்துனம் என்ற வெங்கடேஷின் படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கலக்கியுள்ளது. அனில் ரவுபுடி இயக்கிய இந்த படம் மீடியம் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சக்கைப் போடு போட்டு வருகிறது. வெங்கடேஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது.