கேஜிஎஃப் 2 வில் வில்லனாக நடிப்பது ஏன்? சஞ்சய் தத் பதில்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (09:27 IST)
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தது ஏன் என நடிகர் சஞ்சய் தத் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் வரிசையாக படங்களை நடித்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கே ஜி எப் 2 படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் முதல் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். பின்னர் இப்போது மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆனாலும் அவர் இப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வில்லனாக நடித்துள்ள கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தது ஏன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘ஆதிரா கதாபாத்திரம் இதுவரை நான் செய்ததிலேயே வித்தியாசமானக் கதாபாத்திரம். கதைப்படி ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் மற்றும் மன அளவில் பலமானவனாக இருக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தேன். கேஜிஎப் 1போலவே இந்த பாகத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. கே.ஜி.எஃப் 2'-வில் பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டவுடன் நான் உற்சாகமாகிவிட்டேன்.  என் கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அதனால் தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்