மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் சம்யுக்தா மேனன்… கலர்ஃபுல் ஆல்பம்!

Webdunia
திங்கள், 9 டிசம்பர் 2024 (16:46 IST)
மலையாள சினிமா உலகில் இருந்துதான் இப்போது தென்னிந்திய சினிமாக்களுக்கு ஹீரோயின்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாத்தி படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் சம்யுக்தா.தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயரை நீக்கியதாக அவர் கூறியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

இதுபற்றி அவர் “வாத்தி படத்தில் இருந்து அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியிருந்தார். வாத்தி படத்துக்குப் பிறகு தமிழில் இன்னும் அடுத்த படத்தில் அவர் கமிட்டாகவில்லை.

புதுப் படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தம் ஆகாத நிலையில் அவர் தன்னுடைய நீண்டநாள் காதலரை மணம் முடிக்க உள்ளதாகவும் அதனால்தான் அவர் புதுப் படங்கள் எதையும் ஒத்துக்கொள்ள வில்லை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக எந்த பதிலும் சொல்லாமல் சம்யுக்தா தரப்பு மௌனமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha (@iamsamyuktha_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்