இன்றைய உலகில் ஆன்மிகம் அதிகமாக தேவைப்படுகிறது… சமந்தா கருத்து!

vinoth
புதன், 17 ஜூலை 2024 (08:00 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில ஆண்டுகளாக மையோசிட்டீஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கடந்த காலத்தில் தான் ஆரோக்யமற்ற ஒரு உணவுப் பொருள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது அவர் ஒரு சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார்.

அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு சமூகவலைதளப் பதிவில் தான் முகத்தில் நெபுலைசரை பொருத்திக்கொண்டிருக்கும் புகைப்படத்தோடு “வைரல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மாற்றுவழியாக ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் டிஸ்டில்ட் தண்ணீர் ஆகியவற்றை நெபுலைஸ் செய்து பயன்படுத்துங்கள். நல்ல தீர்வு கிடைக்கிறது. தேவையற்ற மருந்துகளை எடுக்க வேண்டாம்” எனக் கூறியிருந்தார். இது குறித்து பல்வேறு விதமான கண்டனங்கள் சமந்தாவின் மேல் எழுந்துள்ளன. அவர் பரிந்துரைக்கும் சிகிச்சை உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்று மருத்துவத்துறையில் உள்ள பலர் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆன்மிகம்தான் உதவியது என்று கூறியுள்ளார். மேலும் “கடந்த 3 வருடங்களாக சில விஷயங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் வாழ்க்கை நம் மீது வீசும் அனைத்தையும் எதிர்கொள்ளதான் வேண்டும்.  ஆனால் நான் மீண்டு வர ஆன்மிகம்தான் எனக்கு உதவியது. என் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் அதன் தாக்கம் உள்ளது. இன்றைய உலகில் ஆன்மிகம் மிக அதிகமாக மக்களுக்குத் தேவைப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்