இசையமைப்பாளரின் வங்கி கணக்கில் மோசடி ! சைபர் போலீஸில் புகார்

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:27 IST)
பிரபல இசையமைப்பாளர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.60,000 பணம் மோசடி செய்யபப்ட்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக இருப்பவர் ராகுல்ராஜ்.  இவர் திருவனந்தபுரத்தில் உள்ள தேசியவங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்.

நேற்று இவர் வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, அதில் ரூ.60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு முறையும் அவரது அக்கடவுண்ட்ல் இருந்து, ரூ,6000, ரூ,7000 என பணம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் ராகுல்ராஜ் வங்கி அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். தனக்கு ஓடிபி எதுவும் வரவில்லை எனவும் கூறி, இந்த மோசடி பற்றி சைபர் கிரைமில் புகார் செய்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்