ஐபிஎல் தொடரில் சூதாட்டம்...2 பேர் கைது

சனி, 12 ஜூன் 2021 (23:31 IST)
ஐபிஎல் தொடரில் இரண்டு பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தொடங்கிய  ஐபிஎல்-2021 -14 வது சீசனில்  8 அணிகள் பங்கேற்றன. ஆனால் கொரொனா இரண்டாவது அலை பரவலால் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.

மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்  நடப்பு ஐபிஎல்- தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மனிஷ் கன்சல் மற்றும் க்ரிஷன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவரும் சன்ரைஸ்  ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன போட்டி குறித்த தகவல்கள் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்