மோசடி செய்த மேனேஜரை நீக்கினாரா சமந்தா?

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (09:56 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம்வந்த தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார். அவர் இப்போது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படம் ரிலீஸாகியுள்ள நிலையில் இப்போது அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

வேறு படங்கள் எதையும் ஒத்துக்கொள்ளாமல் சமந்தா ஒரு ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று தனக்கு ஏற்பட்டுள்ள மையோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமந்தாவின் மேலாளர் அவரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும் அதனால் அவரை வேலையை விட்டு சமந்தா நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்