புத்தாண்டு தீர்மானத்தோடு சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (08:47 IST)
நடிகை சமந்தா உடல்நலப் பிரச்சனைக் காரணமாக தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

பிரபல நடிகை சமந்தா மையோசிட்டிஸ் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு பிரச்சனையில் இருப்பதாகவும், அதில் இருந்து இப்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் அவர் சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என நம்பிக்கை வார்த்தைகளை பகிர்ந்திருந்தனர்.

இதையடுத்து இப்போது அவர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் புதிதாக படங்களில் ஒப்பந்தமாகவில்லை.

இந்நிலையில் அவர் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ முன்னோக்கி செயல்படுங்கள்.  நம்மால் முடிந்ததை நாம் கட்டுப்படுத்துவோம். புதிய மற்றும் எளிமையான தீர்மானங்களுக்கான நேரம்.  அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இனிய 2023” எனக் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்