சமந்தா நடித்துள்ள ‘சிட்டாடல்’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
வியாழன், 10 அக்டோபர் 2024 (15:34 IST)
சமந்தா, பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஏற்கனவே பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடரின் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதனை சமந்தா மறுத்து  தான் நடிக்கும் தொடர் ரீமேக் இல்லை என்று தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் கதாநாயகனாக வருண் தவான் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஆக்‌ஷன் மற்றும் கிளாமர் காட்சிகளில் அதிகமாக நடிக்க உள்ளாராம் சமந்தா. அதனால் அவருக்கு வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட இருமடங்காக 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதன் முதல் லுக்போஸ்டர் வெளியான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி இந்த தொடர் ரிலீஸாகவுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் தழுவலாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்