அமைதியை விரும்பி 48 நாள் தியான பயணம் சென்ற சமந்தா!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (15:12 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "48 நாட்கள் ஈஷா கிரியா யோகம் கடைபிடித்து தியானம் செய்யபோவதாக தெரிவித்துள்ளார். தியானத்தை இன்று முதல் இன்று துவங்கியுள்ள சமந்தாவுடன் அவரது செல்ல நாய் ஹாஷ் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில்,  " தியானம் செய்வதால் மனம் அமைதியடைவதுடன் முகம் பொலிவாகும், அகமும் தெளிவாகும்" என  கேப்ஷன் கொடுத்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Today i begin my 48 days of the Isha kriya journey.. I invite you to join me ... Isha kriya brings health , prosperity and well-being . It is a powerful tool to cope .. and is meant to empower us to live life to our fullest potential .. link in bio .. it is a free guided meditation.. I wish you peace

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்