சமந்தா பெரிய படிப்ஸ் போல... இணையத்தில் தீயாய் பரவும் ஸ்கூல் ரிப்போட் கார்ட்!

Webdunia
திங்கள், 1 ஜூன் 2020 (07:49 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு 2017ம் அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

பொதுவாக பிரபலங்களின் personal வாழ்க்கை குறித்த விஷயங்களை தெரிந்துக்கொள்வதில் அவரது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவதுண்டு. அப்டித்தான் சமந்தா ஸ்கூல் ரிப்போட் கார்ட் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த ரிப்போர்ட் கார்டில் சமந்தா எடுத்துள்ள மதிப்பெண்களை பார்த்த ரசிகர்கள்,  சம்மு நீங்க ஒரு பெரிய படிப்ஸ் தான் போல என ஆச்சர்யத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்