ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் தடைசெய்யபட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள்,வணிக வளாகங்கள் இயங்குவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதில், ஜூன் 8 முதல் இயங்க அனுமதிக்கப்பட்டவை :
பள்ளிகள் , கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஓப்புக்கொண்டால் ஜூலை மாதம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வில் எதற்கெல்லாம் தடை;
65 வயது வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயது குறைவான சிறுவர் சிறுமியர் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது எனவும், இரவு 9 பது மணிமுதல் அதிகாலை 5 மணிவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.