தமிழில் கால் பதிக்கும் சல்மான் : தபாங் தமிழ் ட்ரைலர் வெளியீடு

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (20:08 IST)
ஹிந்தி சினிமாவில்  உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சல்மான் கான். அவரது நடிபில் , இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, சல்மான் கான் நடிப்பில் வெளிவந்துள்ள தபாங் 1 மற்றும் தபாங் 2 ஆகிய படங்களில் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், மூன்றாவது பாகத்தை இயக்குநர் பிரபு தேவா இயக்குகிறார். நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார்.
 
இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில்,இன்று டிரைலர் தமிழ் மற்றும் ஹிந்தி மற்றும் இதர மொழிகளிலும் வெளியாகி உள்ளது. சல்மான் கான் நடிப்பில் தமிழில் டப் செய்யப்பட்டு வரும் முதல் படம் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்