தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தெலுங்கு நடிகை

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (18:40 IST)
தெலுங்கில் அறிமுகமான ஷாலினி பாண்டே, தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிறார்கள்.
 
விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் விக்ரமின் மகன் த்ருவ். வேறு சில மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்கின்றனர்.
 
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ படத்தில் நடித்து வருகிறார். அத்துடன், தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் ‘சாவித்ரி’யின் வாழ்க்கை வரலாற்றிலும் நடிக்கிறார்.
 
தெலுங்கில் இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தாலும், கதை சரியில்லாததால் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறாராம் ஷாலினி. அதேசமயம், தமிழில் நல்ல நல்ல கதைகளாகக் கேட்டு வருகிறாராம். அப்படிக் கேட்டதில், ஜீவா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஷாலினி பாண்டே.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்