"அவ என்னென்ன சொன்னான்னு தெரியும்" வஞ்சம் வைத்து கவினை நாமினேட் செய்த சாக்ஷி!

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (12:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் இன்று துவங்கப்பட்டது. இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் சாக்ஷி கவினை நாமினேட் செய்கிறார். 


 
பிக்பாஸ் வீட்டில் காதல் அளப்பறைகளை செய்து பார்வையாளர்களை கடுப்பேற்றி வருபவர்கள் சாக்ஷி மற்றும் கவின். கவின் அடிக்கடி சைடு கேப்பில் லொஸ்லியாவுடனும் கடலை போடுவதால் மாக்கள் கவின் மீது செம்ம கடுப்பில் இருந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது துவங்கியுள்ள இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சில விஷயங்ககள் ஓப்பனாக பேசியிருக்கலாம் என்ற காரணத்தை சொல்லி சாக்ஷி கவினை நாமினேட் செய்தார். இதை கேட்டவுடனேயே கவின் அதிர்ச்சியாக ஒரு லுக் விட்டார். பின்னர் சரவணன் மற்றும் சேரனிடம், அவள் என்னென்ன சொன்னா.. என்னென்ன பேசினான்னு எனக்கு தெரியும்.. அவ என் பெயரை சொன்னதுக்கு அப்புறம் கூட எனக்கு அவ பெயரை சொல்லணும்னு தோணல என்று கூறுகிறார் கவின். 
 
இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் நீ தான சாக்ஷியை நாமினேட் செய்த அப்போ அவ ஏதாச்சும் சொன்னாலா?  இப்போ நீ மட்டும் என்ன ஓவர் ஆக்ட் பண்ணிட்டு இருக்குற என கேட்டு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்