தேர்தல்ல நிக்க போறீங்களா? சாக்‌ஷியின் புகைப்படத்துக்கு குவியும் கமெண்ட்ஸ்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (15:35 IST)
நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தால் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். அதனால் ரசிகர்களுக்கும் அவருக்கும் இடையே அவ்வப்போது சில வாய்க்கால் தகராறுகளும் நடக்கும்.

இந்நிலையில் முதல் முறையாக அவரது புகைப்படம் ஒன்றுக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. ஏன் தெரியுமா? அவர் வேட்டி சட்டை அணிந்து அந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதால்தான். அதைப் பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவிக்க ஒரு சிலரோ ‘என்ன தேர்தல்ல நிக்க போறீங்களா?’ செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்