திரையுலகை ஆண்டது போதும்…தமிழகத்தை ஆளவா! இந்த வாட்டி சூர்யா ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:37 IST)
நடிகர்களின் ரசிகர்களுக்கு இருக்கும் முட்டாள்தனமான அன்பை அவ்வபோது போஸ்டர்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போலவும் விவேகானந்தர் போலவும் சித்தரித்து அவ்வபோது அவரது ரசிகர்கள் சர்ச்சையான போஸ்டர்களை ஒட்டுவார்கள். சமீபத்தில் கூட அதுபோல போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யபட்டது. இதெல்லாம் எப்படியாவது அந்த நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டால் நாமும் உள்ளே சென்று வட்டச்செயலாளர் அளவுக்காவது பதவியை வாங்கிவிடலாம் என்ற நப்பாசையில்தான்.

அந்த வகையில் இப்போது சூர்யா ரசிகர்களும் இதுபோன்ற முட்டாள்தனமாக போஸ்டர் அடித்து ஒட்டும் செயலில் இறங்கியுள்ளனர். அதில் ‘திரையுலகை ஆண்டது போதும்... தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே...!' எனக் கூறியுள்ளனர். இதுவரை சூர்யா அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக எங்கேயும் சொல்லாத நிலையில் ரசிகர்களின் இந்த போஸ்டர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்