சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் முக்கிய அறிவிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (10:03 IST)
சாய்பல்லவி நடிக்கும் கார்கி படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள ‘கார்கி’ படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ரிலீஸாக உள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் நேற்று சாய்பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் “நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.” எனக் கூறி ‘கார்கி’ படத்தின் மேக்கிங் வீடியோ துணுக்கை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்