விக்ரமின் 'சாமி 2: அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (20:50 IST)
சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய 'சாமி 2' திரைப்படம் செப்டம்பர் ரிலீஸ் என கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

இதன்படி இந்த படம் வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விக்ரம் ஜோடியாக முதன்முதலில் கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'சாமி' முதல் பாகத்தை இயக்கிய ஹரி இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்