அப்போது., சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்க மாட்டோம்.வருவது கண்டிக்கத்தக்கது. பிளாஸ்டிக் கேரி பேக் வரும் ஜனவரி 1 முதல் தடை என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், கேரி பேக் என்பது ஒரு தவறான பொருளை வைத்து விற்பது போல கருதி, வணிகர்களை தொல்லை செய்து, கடைகளில் இருந்து பறிமுதல் செய்கின்றனர். முதல்வர் உத்திரவினையும் மீறுவது போல, ஒரு சில ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகையால் அதை கண்டித்து நாள மறுநாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த விக்கிரமராஜா, ஜனவரி மாதம் 1 ம் தேதி ஒன்று தான் ஒரு மாநில முதல்வரே, அறிவித்துள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியாளர்கள் குழப்ப நிலையை நீடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.